1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2023 (07:34 IST)

மாவீரன் படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்குக்காக காஷ்மீர் சென்ற படக்குழு சில பிரச்சனைகளால் திரும்பி வந்தது. இந்நிலையில் இப்போது மாவீரன் படத்தின் பணிகளில் பிஸியாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு  சமீபத்தில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இப்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன.


மாவீரன் திரைப்படம் ஜுலை 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இப்போது படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இது சம்மந்தமாக டப்பிங் பேசும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த அப்டேட்டை தந்துள்ளார் சிவகார்த்திகேயன். மாவீரன் படத்தில் மிஷ்கின் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.