1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2023 (17:13 IST)

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

maaveeran
சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள மாவீரன் திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் ஒரு முக்கிய அறிவிப்பை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். 
 
அதாவது மாவீரன் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விரைவில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
சமீப காலமாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. அதேபோல் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் சில படங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட நிலையில் தற்போது மாவீரன் படத்தையும் அந்நிறுவனமே வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran