சூரியை புகழ்ந்து தள்ளிய தல அஜித்

Last Updated: சனி, 13 அக்டோபர் 2018 (11:06 IST)
அஜித் மற்றும் சிவா கூட்டணியில் நான்காவது முறையாக  ‘விஸ்வாசம்’ தயாராகி வருகிறது. ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய இரண்டு படங்கள் வெற்றிநடைபோட்டது. ஆனால் இதில் கடைசியாக வெளியான ‘விவேகம்’ மட்டும் சற்று தோல்வியைத் தழுவியது. ஆதலால்,‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பிலேயே அடுத்த படத்திலும் நடிக்கிறார் அஜித்.
இப்படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. வயதான தோற்றத்தை படம்பிடித்த படக்குழுவினர். அவரின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளை எடுத்து வருவதாக தெரிவித்தனர். 
 
இந்நிலையில், அஜித் ரசிகனாக ஆர்.கே. சுரேஷ் நடித்திருக்கும் பில்லா பாண்டி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூரி பேசும்போது, சீமராஜா படத்தில் என்னுடைய சிக்ஸ் பேக் பார்த்துவிட்டு எனக்கு ஒரு போன் கால் வந்தது.
 
அது வேறு யாரும் இல்லை இயக்குனர் சிவா அவர்கள் மூலமாக நடிகர் அஜித்
படதளத்தில் இருந்து  பேசினார். எப்படி சூரி சிக்ஸ் பேக் வைத்தீர்கள், அதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்றெல்லாம் கேட்டு என்னை பாராட்டினார். 
 
அது தனக்கு  மிகுந்த நெகிழ்ச்சியை உண்டாக்கியாகியது என நடிகர் அந்த விழாவில் பேசினார். 


இதில் மேலும் படிக்கவும் :