திங்கள், 20 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (14:41 IST)

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படம்: டிஜிட்டல், சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா?

prince
சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை ஹாட் ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் அதேபோல் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் ஆகிய இரண்டு உரிமைகளையும் சேர்த்து ரூபாய் 42 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.‘பிரின்ஸ்’  படத்தின் மொத்த பட்ஜெட் 40 கோடி ரூபாய் என்று கூறப்பட்ட நிலையில் அதைவிட அதிகமாக தற்போது விற்பனையாகி உள்ளது என்பதும் அதுமட்டுமின்றி இன்னும் திரையரங்குகளில் உரிமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பிரின்ஸ் திரைப்படம் 100 கோடி ரூபாய் அளவு வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது