செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (16:03 IST)

சுஷாந்த் மரணத்தால் சிவகார்த்திகேயன் படத்துக்கு வந்த சிக்கல்… அதிர்ச்சியில் படக்குழு!

நடிகர் சுஷாந்த் மரண வழக்கு விசாரணையில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக ரகுல் பிரித் சிங்கால் சர்ச்சைகள் கிளம்பியுள்ளதால் சிவகார்த்திகேயனின் அயலான் படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.

சுஷாந்த்  சிங்கின் மரணம் சம்மந்தப்பட்ட வழக்கில் போதை பொருள் பயன்படுத்தியவர்கள் குறித்து ஒரு பட்டியலைப் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதனால் சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா சக்ரோபர்த்தி கைதாகி உள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 15 நடிகர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்படக்கூடும் என்ற தகவல்கலும் வெளியானது.

இந்நிலையில், ரியா சக்கரவர்த்தியிடம் விசாரித்ததில் சில நடிகர், நடிகைகளின் பெயரை அவர் கூறியதாகவும் அவர்களுக்கு என்சிபி பிரிவினர் சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியானது. இதில், சாரால் அலிகான்,சியொன் கபொட்டா,ரகுல் ஃபிரீத்சிங் உள்ளிட்டோர்களின் பெயர்கள் இருப்பதாகத் தகவல் வெளியானது. இதனால் இவர்கள் விசாரணைக்காக கைது செய்யப்படலாம் எனவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இன்னும் சில நாட்களில் சிவகார்த்திகேயனின் அயலான் படப்பிடிப்பில் ரகுல் பிரீத் சிங் கலந்துகொள்ள உள்ளார். ஒருவேளை அவர் கைது செய்யப்பட்டால் மீண்டும் படப்பிடிப்பு பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் படக்குழுவினர் உள்ளதாக சொல்லப்படுகிறது.