திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 21 ஜூலை 2018 (18:49 IST)

ஒரே புகைப்படத்தால் மனமுடைந்த சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். சீமராஜா படத்தின் வேலைகள் முடிந்துள்ள நிலையில், அடுத்தடுத்த படத்தில் பிஸியாகி இருக்கும் சிவகார்த்திகேயன். 
 
ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும்,  ராஜேஷ் இயக்கத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இரு படங்களின் படப்பிடிப்பும் அடுத்தடுத்து துவங்கிய நிலையில், படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் பிஸியாக இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஆனால், தற்போது அவர் ரெமோ படத்தில் பெண் வேடமிட்டு நடித்திருந்த படம் வைரலாகி வருகிறது. இதனால் மிகவும் மனவேதனை அடைந்துள்ளார் அவர். 
 
பெண் வேடத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் படத்தையும், தமிழ் படம் 2வில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா மேனனின் புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து சிலர் டிரண்ட் செய்து இணையத்தில் விட்டுள்ளனர். இதுவே அவரது வருத்தத்திற்கு காரணமாக உள்ளது.