திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 16 ஜூலை 2018 (17:23 IST)

ராணுவ வீரர் மறைவு ; சவப்பெட்டி மீது 5 மாத குழந்தை : உருக்கும் புகைப்படம்

காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் பலியான இந்திய ராணுவ வீரரின் இறுதி சடங்கில் அவரின் 5 மாத குழந்தை கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

 
கடந்த சில நாட்களாகவே, காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. இந்த சண்டையின் போது, தீவிரவாதிகள் சுட்டதில், ராஜாஸ்தானை சேர்ந்த முகுத் பிகாரி மீனா என்ற ராணுவ வீரர் பலியானார். 
 
அவரின் இறுதி சடங்கு அவரின் சொந்த கிராமத்தில் செய்யப்பட்டது. 2 வருடங்களுக்கு முன்புதான் அவருக்கு திருமணம் நடந்து 5 மாத பெண் குழந்தை இருக்கிறது. 
 
இவரது இறுதி சடங்கில் அவரின் குழந்தையும் கலந்து கொண்டாள். தந்தை இறந்து கூட தெரியாமல் அந்த பிஞ்சு குழந்தை, அவரின் சவப்பெட்டியின் மீது அமர்ந்து சென்றாள். ஒரு கட்டத்தில் அதன் மேலேயே அவள் படுத்துக்கொண்டாள். பார்ப்பதற்கு மனதை உருக்கும் நிகழ்வாக அது இருந்தது. 
 
இந்த காட்சியை புகைப்படம் எடுத்த சிலர், அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.