செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2024 (20:56 IST)

விஜய் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் படம்- வெங்கட்பிரபுவின் புது ரூட்!

விஜய்யின் The GOAT பட ஷுட்டிங் முடிந்த பின்,  ஏற்கனவே ஒப்புக்கொண்ட சத்யஜோதி  நிறுவனத்திற்காக வெங்கட்பிரபு ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

கன்னடம் சினிமா சூப்பர் ஸ்டார் சுதீப்பை வைத்து வெங்கட்பிரபு  ஒரு படம் இயக்கவிருந்தார். இப்படத்தை சத்யஜோதி தயாரிக்கிறது என்ற தகவல் வெளியாகிறது.
 
இதற்கிடையே விஜயிடம் இருந்து அழைப்பு வரவே இப்படத்தை முதலில் இயக்க என்.ஓ.சி பெற்ற வெங்கட்பிரபு. ஏஜிஎஸ் தயாரிப்பி, விஜய்யின் நடிப்பில்  கோட் படத்தை இயக்க ஒப்பந்தமானார். தற்போது இப்பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
 
விஜய்யின் The GOAT பட ஷுட்டிங் முடிந்த பின்,  ஏற்கனவே ஒப்புக்கொண்ட சத்யஜோதி  நிறுவனத்திற்காக வெங்கட்பிரபு ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 
வெங்கட்பிரபு விஜய்யை இயக்கிவிட்டு வந்தால் அடுத்து இயக்கும் படத்தின் எதிர்பார்ப்பும், பாடத்திற்கு பிசினஸ் மற்றும் மார்க்கெட்டும் அதிகரிகரிக்கும் என்பதால் சத்யஜோதி இந்த முடிவெடுத்ததாகவும், இப்படத்தில் நடிக்கும்போது சம்பளம் பற்றிப் பேசிக்கொள்ளலாம் என சிவகார்த்திகேயன் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகிறது.