திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (17:12 IST)

இன்னும் எத்தனை அனிதாக்களை நீட் தேர்வு பலி வாங்குமோ? - அல்போன்ஸ் உருக்கம்

நீட் தேர்வால் தனது மருத்துவர் படிப்பு கனவு கலைந்ததால் அரியலூரை சேர்ந்த அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார்.


 

 
அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தை சேர்ந்த அனிதா 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்தார். இவரது மருந்துவ கட் ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.7 ஆகும். இந்நிலையில், மத்திய அரசு நீட் தேவு மூலம் மருத்துவ படிப்பிற்கான சீட் வழங்கப்படும் என அறிவித்தது. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட் ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே. 
 
பின்னர் நீட் தேர்விற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தன்னையும் ஒரு மனுதாரராக அவர் இணைத்துக்கொண்டார். இந்நிலையில்தான், இன்று அவர் தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைந்தார்.


 

 
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் “ நீட் தேர்வுக்காக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். இன்னும் எத்தனை அனிதாக்களை இந்த நீட் தேர்வு பலி வாங்குமோ என்பதை நினைக்கும் போது என் மனம் பதைபதைக்கிறது” எனக் கூறினார்.