ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 டிசம்பர் 2018 (12:46 IST)

ஒரே நாளில் 10 மில்லியனை தொட்ட மாரி 2 ட்ரைலர்!

நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியாகிய மாரி 2 திரைப்படத்தின் ட்ரைலர் ஒரே நாளில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அபார சாதனை படைத்துள்ளது.
 

 
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மாரி'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக மாரி-2 திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. நடிகர் தனுஷ் நடிக்கும் இப்படத்திற்கு தனுஷ்-க்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும், வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
 
மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த தனுஷ் ரசிகர்களுக்கு விருத்தாக நேற்று வெளியானது மாரி 2 ட்ரைலர்.  ஏரியா டானாக வலம் வரும் தனுஷ், தனுஷை பின்தொடரும் சாய் பல்லவி , இவர்கள் இருவருக்கும் சமமாக காமெடியில் கலக்கும் ரோபோ சங்கர் என படம் முழுவதும் மசாலா மிக்சிங் ஆக அற்புதமாக அமைந்துள்ளது.  
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் 10 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்து  டாப் ட்ரெண்டிங்கில் மாரி 2 படத்தின் ட்ரைலர் உள்ளது என்பது கூடுதல் தகவல்.