புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 5 நவம்பர் 2018 (11:59 IST)

நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்...!

எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயனும் , நயன்தாராவும் ஜோடியாக நடிக்கிறார்கள்.
இந்தப்படம் ரஜினியின் ‘மன்னன்’ படத்தின் சாயலில் படமாக்கப்படுகிறது. படத்தின் ஒவ்வொரு சீனிலும் நயன்தாராவின் பங்களிப்பு அதிகம் இருக்கவேண்டும் என சிவகார்த்திகேயன் விரும்புகிறாராம்.இன்னும் சொல்லபோனால், ஹீரோயிசத்துக்கான வாய்ப்புகளையும் நயன்தாராவுக்காக விட்டுக்கொடுக்கிறாராம். 
 
இந்த படத்தில், நயன்தாரா சிவகார்த்திகேயனை பழிவாங்கிய வெற்றியில் கொக்கரிப்பதும், அவரிடம் சிவகார்த்திகேயன் மன்னிப்பு கேட்பதும் படத்தின் காட்சிகளாக அமைத்துள்ளனர். 
 
இப்படி நயனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்னவென்றால், வேலைக்காரன் திரைப்படத்தில் நயன்தாராவின் காட்சிகள் பலவற்றை வெட்டியெடுத்து சிவகார்த்தியின் காட்சிகளை அதிகப்படுத்தியிருந்தார் மோகன் ராஜா.

ஆனால், தனது காட்சிகள் இல்லாதது குறித்து நயன்தாரா அப்போது எவ்வித அதிருப்தியும் காட்டாததாலேயே நயன்தாராவுக்கு இந்தப்படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என சிவகார்த்திகேயன்  முடிவெடுத்திருக்கிறாராம்.