திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 18 மே 2020 (08:38 IST)

ஒரு தடவை ஜெயிச்சா பத்தாது: சிவகார்த்திகேயனுக்கு டுவீட் போட்ட கலெக்டர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் கலெக்டர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவாகவும் சில மாவட்டங்களில் கொரோனா இல்லா மாவட்டமாகவும் மாறி வருகிறது 
 
அந்த வகையில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்த மாவட்டங்களில் ஒன்றாக திருப்பூர் மாவட்டம் இருந்தது. ஆனால் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் அவர்களின் அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது திருப்பூர் மாவட்டம் கொரோனா இல்லா மாவட்டமாக மாறியுள்ளது 
இந்த மாவட்டத்தில் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களும் முற்றிலும் குணமடைந்து விட்டதால் தற்போது திருப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களே இல்லை என்றும் அம்மாவட்ட கலெக்டர் விஜயராகவன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் 
 
இந்த வீட்டுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்த நடிகர் சிவகார்த்திகேயன் உங்களது கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்றும், உங்களை போன்ற அயராது உழைப்பவர்களுக்கு எங்களுடைய ஆதரவு எப்போதும் உண்டு என்றும் தெரிவித்தார். இந்த டுவிட்டுக்கு நன்றி தெரிவித்த கலெக்டர் விஜயராகவன் ’கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு தடவை ஜெயிச்சா பத்தாது, ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கணும் என்று சிவகார்த்திகேயனின் சீமராஜா பட வசனத்தை பதிவு செய்தார். இந்த பதிவை பார்த்த சிவகார்த்திகேயன் ’ஜெயிப்போம்’ என்று கூறியுள்ளார். இந்த டுவீட்டுக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது