வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 18 மே 2020 (08:28 IST)

பாலைவனத்தில் சிக்கிய நடிகர்… படப்பிடிப்பை முடித்தது! நாடு திரும்புவது எப்போது?

நடிகர் பிருத்விராஜ் நடிக்கும் ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பை ஜோர்டான் பாலைவனத்தில் நடத்தி முடித்துள்ளது படக்குழு.

மலையாள சினிமாவின் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் ஆடுஜீவிதம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வெளிநாடுகளுக்கு சென்று மாட்டிக்கொள்ளும் இந்தியர்களின் வாழ்வைப் பற்றியது. இந்த படத்துக்காக 58 பேர் கொண்ட குழுவினரோடு ஜோர்டான் நாட்டில் உள்ள ஒரு பாலைவனத்தில் முகாமிட்டு இருந்தனர் படக்குழுழ்வினர். அப்போது கொரோனா பரவல் உச்சத்தை தொட்டதால் விமானங்கள் முடக்கப்பட்டதால் படக்குழுவினர் அனைவரும் அந்த நாட்டில் இருந்து இந்தியா திரும்ப முடியாத சூழலுக்கு ஆளானார்கள். அவர்களை இப்போது அங்கிருந்து மீட்டு வர முடியாது என மத்திய மற்றும் மாநில அரசுகள் கைவிரித்துவிட்டன.

அதையடுத்து அந்நாட்டு அரசிடம் அனுமதி வாங்கிய படக்குழு படப்பிடிப்பை நடத்தியது. இந்நிலையில் இப்போது படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளதாக பிருத்விராஜ் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்த குழுவினருடனும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது சிறப்பு விமானங்கள் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை இந்திய அரசு மீட்டுக்கொண்டு வரும் நிலையில் ஆடுஜீவிதம் படக்குழுவினர் தாயகம் திரும்புவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.