என்னது பேட்ட படத்துக்கு ரஜினி டப் பண்ணலயா..?

Last Updated: புதன், 2 ஜனவரி 2019 (15:56 IST)
ரஜினியின் பேட்ட படத்தின் அடுத்த ட்ரைலர் வெளியானது.


 
ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி, சிம்ரன் த்ரிஷா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப்படம்  பொங்கல் விருந்தாக ஜனவரி 10ந் தேதி திரைக்கு வர உள்ளது.
 
பேட்ட படத்தின் ஒட்டுமொத்த பாடல்கள் 9-ம் தேதி வெளியாகி இணையதள வாசிகள் அனைவரையும் ஈர்த்து வருகிறது. இப்படத்தின் டீர் டிசம்பர் 12-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளன்று காலை வெளியானது.
 
அண்மையில் பேட்ட படத்தின் தமிழ் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது பேட்ட தெலுங்கு ட்ரைலர் வெளியாகி அசத்தி வருகிறது. ரஜினிகாந்தின் ஸ்டைல் நிறைந்த ட்ரைலர் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. 
 
ரஜினின் தெலுங்கு பேட்ட படத்திற்கு பாடகர் மனோ டப்பிங் செய்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.இந்த ட்ரைலரை பார்த்த தெலுங்கு ரசிகர்கள்  மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர் 


இதில் மேலும் படிக்கவும் :