வியாழன், 27 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (21:48 IST)

டி.ராஜேந்தர் மீது மான நஷ்ட வழக்கு: பிரபல தயாரிப்பாளர்

சிம்புவின் தந்தையும் இயக்குனருமான டி.ராஜேந்தர் இன்று சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர் கூறியதாவது:

இந்தியில் சிலம்பரசனை அறிமுகப்படுத்த மன்மதன் படத்தை எடுக்க முயற்சி செய்ததாகவும், தற்போது அவர் தமிழ் திரைபடங்களில் பிசியாக இருப்பதால் எடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

மன்மதன் படத்தின் வட இந்திய உரிமத்தை விற்க முயன்ற போது தயாரிப்பாளர் தேனப்பனின் தூண்டுதலின் பேரில் எஸ்.என்.மீடியாவை சேர்ந்த சஞ்சய் லால்வானி என்பவர் இந்த படத்தின் உரிமம் தன்னிடம் இருப்பதாக பொய்யான ஆவணங்கள் மூலம் விற்க முயல்வதாகவும் எந்த சூழலிலும் தனது உரிமையை விட்டு கொடுக்க மாட்டேன் என்றும் டி.ராஜேந்தர் கூறினார்.

இந்த நிலையில் டி.ராஜேந்தரின் குற்றச்சாட்டுக்கு தயாரிப்பாளர் தேனப்பன் தற்போது பதில் அளித்துள்ளார். சிலம்பரசன் நடித்து, இயக்கிய வல்லவன் படத்தின் இந்தி, வட இந்திய உரிமை தமது நிறுவனத்துக்கு சொந்தமானது என தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் விளக்கம்

மேலும் *என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக டி.ராஜேந்தர் மீது மான நஷ்ட வழக்கு தொடர நேரிடும் என்றும், இது தொடர்பாக காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.