செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2021 (16:49 IST)

சிம்பு ஆரம்பிக்க உள்ள ட்ரஸ்ட்… அட பேரு இதுதானா?

நடிகர் சிம்பு ட்ரஸ்ட் ஒன்றை அட்மேன் என்ற பெயரில் ஆரம்பிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிம்புவிடம் சமீபகாலமாக மாற்றங்கள் நிறையவே ஏற்பட்டு வருகின்றன. அதன் படி ஒரே மாதத்தில் ஒரு படத்தை நடித்து முடித்துக் கொடுத்துள்ள அவர் அந்த படத்தை பொங்கலுக்கும் ரிலீஸ் செய்கிறார். அதுமட்டுமில்லாமல் இப்போது வரிசையாக ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் சிம்பு அட்மேன் என்ற வாசகத்தை அடிக்கடி தனது எல்லா சமூகவலைதளப் பதிவுகளிலும் அறிக்கைகளிலும் பயன்படுத்தி வருகிறார். அது என்னவென்றால் சிம்பு விரைவில் ஆரம்பிக்க இருக்கும் ஒரு ட்ரஸ்ட்டின் பெயர்தான் என சொல்கின்றனர் சிம்புவுக்கு நெருக்கமானவர்கள். இந்த ட்ரஸ்ட் மூலமாக நலத்திட்ட உதவிகளை அவர் வழங்க உள்ளாராம்.