1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (19:54 IST)

தொப்பையுடன் தொங்கும் சிம்பு! கலாய்த்தவர்களை வாய் அடைக்க சிம்பு எடுத்த ரிஸ்க்!

உடல் எடைகுறைத்து ஒல்லியாக தோற்றமளிக்க பாங்காக் பறந்துவிட்டார் சிம்பு 


 
ஏஏஏ படத்திற்காக வெயிட் போட்ட சிம்பு அதன் பிறகு குண்டான உடலை குறைக்கிறேன் குறைக்கிறேன் என்று சொல்கிறாரே தவிர குறைத்தபாடில்லை பார்த்தகண்ணுக்கு அப்படியே பப்லி மாஸாக தெரிகிறார். 
 
படத்திற்காக வெய்ட் போட்ட சிம்புவை நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த "வந்தா ராஜாவா தான் வருவேன்" படத்தில் படு மோசமாக வயதானவர் போல் தொப்பையும் சதையுமாக தோற்றமளித்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு சிம்பு நடனமாடுவதை பார்த்து மரண கலாய் கலாய்த்தனர் ரசிகர்கள். சிம்பு ஜி யோகி பாபுவுக்கும்  உங்களுக்கும் அடையாளமே தெரியல என்றெல்லாம் கிண்டலடித்தனர். 

இதனால் கடுப்பான சிம்பு கொதித்தெழுந்து உடலை குறைக்க ரிஸ்க் எடுத்துள்ளார். வெளிநாட்டுக்கு சென்று உடலை குறைத்தே ஆகவேண்டும் என கங்கணம் கட்டிய சிம்பு தற்போது பாங்காக்  சென்றுள்ளார். அங்கு ஒரு மாதம் தங்கி ஒர்க் அவுட் செய்து உடலை மெலித்த பின் நாடுதிரும்பி அடுத்த படத்தில் சைன் செய்யவுள்ளாராம்.