வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் ரெடி… ஆனால் தாமதம் ஏன்?
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநாடு திரைப்படத்துக்கு பிறகு சிம்பு நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.
சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. சென்னை மும்பை என இரண்டு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் இப்போது மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள காலத்துக்கும் நீ வேணும் என்கிற முதல் சிங்கிள் பாடலும் வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் படத்தின் டீசர் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வாரத்தில் ரிலீஸ் செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் திடீரென்று சிம்புவின் தந்தை டி ராஜேந்தருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளதால், இப்போதைக்கு டீசர் வெளியீட்டை தள்ளிவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.