1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (17:11 IST)

டி ராஜேந்தருக்கு வெளிநாட்டு சிகிச்சை: சிம்பு அறிக்கை!

T Rajendhar
சிம்புவின் தந்தை டி ராஜேந்தருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை நடந்தது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் உடல் நலம் கருதியும் சிகிச்சைக்காகவும் தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம்
 
அவர் முழு சுயநினைவுடன் நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் அனைவரின் அன்புக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்