ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 28 மே 2022 (10:59 IST)

ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி… வெளியான தகவல்!

ஐபிஎல் இறுதிப் போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடக்க உள்ள நிலையில் அதில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்துவந்த ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் இந்த போட்டி நடக்க உள்ளது.

இதையடுத்து போட்டிக்கு முன்பாக இந்திய கிரிக்கெட்டின் 75 ஆண்டுகால சாதனையை போற்றும் வகையில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசைக் கச்சேரி நடக்க உள்ளது. இதில் பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் உள்ளிட்டோரும் கலந்துகொள்ள உள்ளனர்.