வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By

ஒரே படத்தில் சிம்பு-தனுஷ்: கோலிவுட்டில் ஒரு ஆச்சரியம்

கோலிவுட் திரையுலகில் சிம்புவும் தனுஷூம் நண்பர்கள் என்று கூறி கொண்டாலும் இருவரும் போட்டி நடிகர்களாகவே பார்க்கப்பட்டு வருகின்றனர். இருதரப்பு ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மோதி கொள்வதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள்தான்

இந்த நிலையில் தொழில் அளவில் போட்டியாளர்களாக இருந்தாலும் தாங்கள் உண்மையான நண்பர்கள் என்பதை தற்போது நிரூபித்துள்ளனர். ஆம், சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகும் 'சக்க போடு போடு ராஜா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த படத்தின் பாடல்களை வெளியிட நடிகர் தனுஷ் சம்மதித்துள்ளார். இந்த தகவலை இந்த படத்தின் ஹீரோ சந்தானம் தனது டுவிட்டரில் ஒரு வீடியோ செய்தி மூலம் உறுதி செய்துள்ளார்.

ஒரே படத்தில் சிம்பு, தனுஷ் இணைவது கோலிவுட் திரையுலகில் ஆச்சரியத்தை வரவழைப்பது மட்டுமின்றி இருதரப்பு ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது