1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 24 நவம்பர் 2017 (21:22 IST)

ஹிந்தியில் இசையமைக்கும் அனிருத்? அதுவும் தனுஷ் மூலமாக...

தனுஷ் நடிக்க இருக்கும் ஹிந்திப் படத்துக்கு, அனிருத் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. தனுஷ் நடித்த ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தனுஷ் - அனிருத் காம்போவில் வெளியான ‘கொலவெறி’ பாடல், உலகம் முழுக்க ஹிட்டடித்தது. தனுஷின் படங்களுக்குத் தொடர்ச்சியாக இசையமைத்து வந்தார் அனிருத்.
 
ஆனால், இருவருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட, தற்போது அனிருத்தும், தனுஷும் பேசிக் கொள்வதில்லை. அதனால், தனுஷ் படங்களுக்கு அனிருத் இசையமைப்பதும் இல்லை. தனுஷ் படத்துக்கு மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்தாலும், அனிருத் அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
 
எனவே, இருவரையும் இணைத்துவைக்க சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனுஷ் நடிக்க இருக்கும் ஹிந்திப் படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அனிருத் என்கிறார்கள். தெலுங்கைத் தொடர்ந்து விரைவில் ஹிந்தியிலும் கால் பதிக்கிறார் அனிருத்.