1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 1 ஜனவரி 2022 (17:55 IST)

மிகப்பெரிய கொண்டாட்ட மனநிலையுடன் 2021 ஆண்டை முடிக்கிறேன்: சிம்பு அறிக்கை

2021 ஆம் ஆண்டு முடிந்து 2022ஆம் ஆண்டு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
என் பாசத்துக்குரிய அனைவருக்கும் வணக்கம்!
 
நம்மில் பலர் நெருங்கிய சொந்தங்களை இழந்திருப்போம். பலர் வாழ்க்கையின் எல்லையை தொட்டு மீண்டு இருப்பர் இழப்பையும் நன்மையையும் கடந்த வருடம் கடந்து வந்திருக்கிறோம்.
 
இறைவனின் கருணையால் இந்த புதிய வருடத்தை காணவிருக்கிறோம். 
 
தனிப்பட்ட முறையில் மாநாடு படத்தை மிகப்பெரிய வெற்றியாக பரிசளித்த ஆண்டு இவ்வாண்டு.
 
மிகப்பெரிய கொண்டாட்ட மனநிலையுடன் 2021 ஆண்டை முடிக்கிறேன். 2022 ஆம் ஆண்டும் இதே மகிழ்வுடன் எனக்கும் உங்களுக்கும் அமைய வேண்டிக்கொள்கிறேன்.
 
என்னை எப்போதும் உங்களில் ஒருவனாக பார்த்துக்கொள்ளும் என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், திரை உலக சொந்தங்களுக்கும், என்றென்றும் எனக்கு ஆதாரமாக விளங்கும் பத்திரிகை மற்றும் ஊடக பெருமக்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நலமே வாழ்க. நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ என்று சிம்பு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.