செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (18:05 IST)

சிம்புவுடன் நடிக்கும் படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஹன்சிகா !

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான "மஹா"வில் நடித்துள்ளார். 
 
இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளது படத்தின் மிகப்பெரிய ஹைலைட்.  'மகா' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் நின்றது. அதையடுத்து மீண்டும் படப்பிடிப்பை துவங்கிய படக்குழு விறுவிறுப்பாக படவேலைகளை செய்து வந்தார். 
 
இந்நிலையில் தற்போது மஹா படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ள நடிகை ஹன்சிகா, இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  " எனது 50 வது படமான மஹாவுடன் ஒரு அற்புதமான பயணம். படத்தில் என்னுடன் நடித்த  சக நடிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர்கள் என அத்தனை பேருக்கும் எனது மனமார்ந்த நன்றி. தற்போது படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்படம் உருவாகும் விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. என பதிவிட்டு படத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார்.