திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 12 ஜூலை 2021 (10:26 IST)

கௌதம் சொன்ன கதைக்கு நோ சொன்ன சிம்பு… அதனால் ஏற்பட்ட மாற்றம்!

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

சிம்பு மற்றும் கவுதம் மேனன் ஆகிய இருவரும் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்களில் இணைந்து பணி புரிந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ஒரு திரைப்படத்தில் பணிபுரிய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படத்திற்கு ’நதியினிலே நீராடும் சூரியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் தாமரை பாடல்கள் எழுத இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தற்போதைய நிலை பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ‘எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன. கொரோனாவால் படப்பிடிப்பு செல்வது தாமதமானது. இன்னும் 10 நாட்களில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சூழ்நிலைகள் சரியாக அமைந்தால் வெளிநாட்டிலும் படப்பிடிப்பு நடக்கும் எனக் கூறியுள்ளார்.

ஆனால் இந்த படத்துக்காக கௌதம் சொன்ன கதை சிம்புவுக்கு பிடிக்கவில்லையாம். அதனால்தான் கதைக்காக முதல் முறையாக எழுத்தாளர் ஜெயமோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இப்போது அவர் கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருகிறாராம். கௌதம் மேனனின் திரை வாழ்வில் முதல் முதலாக அவர் படத்துக்கு மற்றொருவர் கதை எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.