திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 20 பிப்ரவரி 2020 (12:40 IST)

மீண்டும் ஒரு மரியாதைக்கு வாழ்த்து கூறிய சிம்பு - மாநாடு படத்தில் இணைந்த பாரதிராஜா..!

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் 'மாநாடு' என்ற திரைப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் வழக்கம்போல் படக்குழுவினர்களுக்கு ஒத்துழைப்பு தர சிம்பு அடம்பிடித்ததால் இந்த படம் கிட்டத்தட்ட டிராப் ஆனதாக செய்திகள் வெளிவந்தது.
 
இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தனர். இதையடுத்து சிம்புவின் தாயார் கொடுத்த உறுதி மொழியை ஏற்று 'மாநாடு' படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்தார். பின்னர் படப்பிடிப்பிற்கான வேலைகள் மும்முரமாக துவங்கிய நிலையில் நேற்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த செய்தியை கேட்ட சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்  இருக்கிறன்றனர். சீமான் , சேரன், பாரதி ராஜா என பிரபலங்கள் துவக்கி வைத்த இப்படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது இயக்கும் மாநாடு படத்தின் முக்கிய ரோலில் சிம்புவுடன் இயக்குனர் பாரதிராஜா நடிக்கிறார்.  மேலும் பாரதி ராஜ நடித்துள்ள மீண்டும் ஒரு மரியாதை படத்திற்கு வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..