1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 7 ஆகஸ்ட் 2021 (10:12 IST)

பொம்மையாகவே மாறிய எமி ஜாக்சன்… ரசிகர்களைக் கவர்ந்த செல்பி!

நடிகை எமி ஜாக்சன் வெளியிட்டுள்ள செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மதராசப் பட்டணம் படம் மூலம் தமிழில் அறிமுகமான எமி ஜாக்சன் தொடர்ந்து தங்க மகன், ஐ, எந்திரன் 2 ஆகிய படங்களிலும் சில பாலிவுட் படங்களிலும் நடித்தார். அதன் பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஆண்ட்ரியாஸ் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் இப்போது எமி ஜாக்சன் மீண்டும் நடிப்பில் ஆர்வமாக இறங்க உள்ளார். அதற்காக தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பொம்மை போல அழகாக இருக்கும் தனது செல்பி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.