1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (16:08 IST)

சிம்புவின் ''மாநாடு'' ரூ.117 கோடி வசூல்....தயாரிப்பாளர் அறிவிப்பு

maanadu sjs and str
தமிழ் சினிமாவில்  நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் ஆண்டு வெளியான படம்  மாநாடு. இப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கினார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்தார்.

5 மொழிகளில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில், சிம்பு மற்றும் எவ்ச்.ஜே சூர்யாவின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடினர்.

ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவான  இப்படம் முதல் நாளில் ரூ.9 கோடி வசூலித்தது. முதல் வாரத்தில் ரூ.50 கோடி வசூலித்தது. 25 வது நாளில் ரூ.100 கோடிகளைக் கடந்தது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் 100 வது  நாளைக்கொண்டாடிய இப்படம் ஓடிடியில் ரிலீஸானது.

இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று இப்படம் உலகம் முழுக்க சுமார் ரூ.117 கோடி வசூல் குவித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.