திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 31 மே 2022 (15:41 IST)

குரங்கு வைரஸை தடுக்க முன்னெசரிக்கை நடவடிக்கை !

monkey virus
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளைத் திண்பதன் மூலம் குரங்கு அம்மை நோய் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்களுக்கு குரங்கு அம்மைத் தொற்று இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது பல நாடுகளில் இத்தொற்று பரவி வருகிறது.

இந்த நோய் தொற்று எளிதில் ஏற்படாது எனிலும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகினால் இந்த நோய்  ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால், காய்ச்சல், தலைவலி, முகுகுவலி, குளிர், சோர்வு, ஆகிய அறிகுறிகள் இருக்கும், மேலும், சுவாசப்பாதை, கண், மூக்கு, பிளவு ஏற்பட்ட தோல் ஆகியவற்றின் மூலம் இந்த நோய் ஏற்படும் என கூறப்படுகிறது.

மேலும், குரங்கு அம்மை நோய் வருபவர்களுக்கு முதல் 3 நாட்கள் காய்ச்சல், தலைவலி,  உடல்வலி இருக்கும் என்றும், உடலில் தோன்றும் கொப்புளங்கள் மூலம்  வரரும் தண்ணீர் பட்டு வைரஸ் பரவி நோய்த்தொற்று அடுத்தவர்களுக்கும் பரவும் என்றும், இது அவர்களின் எச்சில் முலமாகவும் இந்த வைரஸ் தொற்று பரவும் எனக் கூறப்படுகிறது.

அதனால் முடிந்தவளை இந்த தொற்றால் பாதித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.