1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 27 ஜூன் 2018 (19:05 IST)

சிம்பு - கார்த்திக் நரேன் இணையும் புதிய படம்!

சிம்புவின் அடுத்த படத்தில் இளம் இயக்குநர் கார்த்திக் நரேனுடன் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிம்பு சமீபத்தில்வெங்கட் பிரபுவுடனான சந்திப்புக்கு பிறகு, `துருவங்கள் பதினாறு' பட இயக்குநர் கார்த்திக் நரேனையும் சந்துள்ளார். அப்போது கார்த்திக் நரேன், சிம்புவிடம் த்ரில்லர் கதையை கூறியிருப்பதாகவும், அதற்கு சிம்பு சம்மதம் தெரிவித்ததாகவும் விரைவில் அடுத்த கட்ட பணிகள் துவங்க இருப்பதாகவும் தகவல்  வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்நிலியில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் `நரகாசூரன்' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், கார்த்திக் நரேன் அடுத்ததாக `நாடகமேடை' படத்தை  இயக்க இருப்பதாக அறிவித்தார். `நாடகமேடை' படத்தின் பணிகள் தாமதமாகி இருக்கும் நிலையில், கார்த்திக் நரேன் முதலில் சிம்புவை வைத்து படம்  இயக்கபோவதாகவும் கூறப்படுகிறது.
 
இதுதவிர கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஒரு படத்திலும் சிம்பு நடிக்க இருக்கிறார். அதுமட்டுமின்றி, சிம்பு இயக்கும் படம் மற்றும் கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா 2 என படு பிஸியாக சிம்பு இருப்பதாக தகவல்கல் கூறப்படுகிறது.
 
சிம்பு நடிப்பில் அடுத்ததாக `செக்கச் சிவந்த வானம்' விரைவில் ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.