1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (21:12 IST)

வெந்து தணிந்தது காடு: பார்வையற்றவர்களுக்காக ஸ்பெஷல் காட்சி!

vtk special
வெந்து தணிந்தது காடு: பார்வையற்றவர்களுக்காக ஸ்பெஷல் காட்சி!
சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சி சென்னையில் இன்று திரையிடப்பட்டது. இந்த சிறப்பு காட்சி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் அனுமதி என்பது குறிப்பிடதக்கது
 
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஏற்பாடு செய்திருந்த இந்த சிறப்பு காட்சியில் பல பார்வையற்ற சிம்பு ரசிகர்கள் இந்த காட்சிக்கு வருகை தந்து படத்தை ரசித்தனர். மேலும் இந்த சிறப்பு காட்சிக்கு சிம்பு வருகை தந்து பார்வையற்ற ரசிகர்களிடம் உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது