வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (15:15 IST)

''இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்''...கதறி அழுத நடிகர் கூல் சுரேஷ்

cool suresh
கூல் சுரேஷின் காரை ரசிகர்கள் அடித்து  நொறுக்கியதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால்,இதை மறுத்து கூல் சுரேஷ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருப்பவர் கூல் சுரேஷ். இவர்  நடிகர் சிம்புவின் தீவிர ஆதரவாளர் மற்றும் ரசிகர் ஆவார். இவர்,  ஒவ்வொரு திரைப்படத்தின் போது, பிரபல சேனல்களுக்கும், யூடியூப்களுக்கும்  இவர் அளிக்கும் பேட்டி ரசிகர்களைக் கவர்ந்திழுத்தது.

இதனால், அந்த யூடியூப் சேனல் களிலும் அதிக பார்வையாளர்களைப் பெற்றது. இந்த நிலையில், சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை ஒவ்வொருமுறை  பேசும் போதும் அதை புரமோட் செய்திருந்தார். இப்படமும் வெற்றி அடைந்தது.

இந்த நிலையில்,  கூல் சுரேஷின் காரை ரசிகர்கள் அடித்து  நொறுக்கியதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால்,இதை மறுத்து கூல் சுரேஷ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார், அதில், ரசிகர்கள் என்னை எதற்கு தாக்க வேண்டும்!

அவர்கள்தான் எனக்குப் பாதுகாப்பு, நான் முன்னுக்கு வர வேண்டாமா?  நான் என்ன துரோகம் செய்தேன்….கமெண்ட்களில் என்னைப் பற்றி வாய்க்கூசாமல் பேசுகிறார்கள்…. நடிகனாக இருக்க, பேரும் புகழாகவும் இருக்க அவன் என்ன கஷ்டப்படுகிறான் தெரியுமா?    நான் சமூக வலைதளங்களில் பிரபலமானாலும் நான் வருமானமின்றி கஷப்படுகிறேன். ரிவியூ பிடிக்கவில்லை என்றால் இனிமேல் வரமாட்டேன். என் தலைவன் சிம்புவின் படம் ரிலீஸாயிற்று. ரிவியூ கொடுப்பதால் எனக்கு வருமானம் வரவில்லை. என் ரசிகர்கள் என் மீதுள்ள ஆர்வத்தில் காரின் மீது ஏறினர். அதை நான் சரிசெய்துகொள்கிறேன். என்  நண்பன் நடிகர் சந்தனம் உதவுவார்… வந்து தணிந்தது காடு எஸ்டி ஆருக்கு வணக்கத்த போடு என்று கூறி கொண்டே இருப்பேன்.

என் கார் கண்ணாடி உடைந்ததற்கு  நஷ்ட ஈடு வேண்டாம்…   நடிகர் சிம்பு, ‘’இப்படத்தில் நடித்த என்னை விட  தியேட்டரில் உனக்குத் தான் வரவேற்பு அதிகமுள்ளது என்று தெரிவித்ததாகக் கூறினார்.