இறங்கி செய்தல் என்றால் என்ன ? ப்ளூ சட்டை மாறன் டிவீட்
சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் யூடியூபில் சம்பதிக்க இவ்வாறு ரிவ்யூ கொடுக்கிறார்… உண்மையிலேயே இறங்கி எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுவதாக இயக்குனர் கெளதம் மேனன் கூறிய நிலையில் இதுகுறித்துப்ளூ சட்டைமாறன் டுவீட் பதிவிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸான படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படம் பற்றி ப்ளு சட்டை மாறன் தன் Tamiltalkies என்ற யூடியூப் தளத்தில், வெ.த.கா படத்தைப் பற்றிய விமர்சனம் செய்து வீடியோவைப் பதிவிட்டிருந்தார்.
அதில், இயக்குனர் கெளதம் மேனனை வாய்ஸ்ஓவர் பைத்தியம்; சிம்புவை வீணாபோனவன் டான் ஆன கதை; அப்படத்தில் நடித்த நடிகர் ஜாஃபரின் உயரத்தையும் கேலி செய்திருந்தார்.
இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, பேசிய சிம்பு, உருவக்கேலி செய்வதது தவறு என்று தன் கருத்தைக் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலாடியாக ப்ளூசட்டை மாறன் தன் டுவிட்டரில், சிம்பு படப் பாடல்களை சுட்டிக்காட்டி சிம்பு உருவக்கேலி செய்ய வேண்டாம் எனக் கூறியிருந்தார்.
இதையடுத்து, ஒரு வீடியோவை வெளியிட்ட கெளதம் மேனன், ப்ளூசட்டை மாறன் பெயரை சொல்லக்கூடாது என நினைக்கிறேன். அவர் மீது வெறுப்பும் கடுப்புமாக உள்ளது, யூடியூபில் சம்பதிக்க இவ்வாறு ரிவ்யூ கொடுக்கிறார். உண்மையிலேயே இறங்கி எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுவதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது,ப்ளூ சட்டை மாறன் தன் டுவிட்டர் பக்கத்தில், சாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்வதை விரும்பாத தமிழகத்தில்..சாதிய அடையாளத்தை பெருமையாக கருதும் ஒரே இயக்குனர் என்று தெரிவித்ததுடன், இறங்கி செய்தல்..என்று
1. அடியாட்களை ஏவிவிட்டு அடித்தல்?
2. வழக்கு போட்டு சிறையில் தள்ளி சிரித்தல்?
3. ENPK, VKN போல அடுத்ததாக இன்னொரு ஹீரோ மார்க்கெட்டை காலி செய்தல்?
4. தன் படத்தில் வருவதுபோல Lower Basement parking இல் இறங்கி துப்பாக்கியால் சுடுதல்? எனப் பதிவிட்டுள்ளார்.
இவர்கள் இவருக்குமான பிரச்சனையை யாராவது தலையிட்டுத் தீர்த்துவைத்தால் பரவாயில்லை என்று நெட்டிசன்களும் ரசிகர்களும் கூறி வருகின்றனர்.