புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2021 (17:51 IST)

மகாபாரதத்தில் கிருஷ்ணர் 100 வாய்ப்பு கொடுத்தும்... கார்த்தியின் ‘சுல்தான்’ டீசர்!

மகாபாரதத்தில் கிருஷ்ணர் 100 வாய்ப்பு கொடுத்தும்...
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சுல்தான் படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது 
 
இந்த டீசரில் நாயகன் மற்றும் வில்லன் ஆகிய இருவரும் மகாபாரதம் குறித்த வசனங்கள் பேசும் காட்சிகள் உள்ளன. மகாபாரதத்தில் கிருஷ்ணர் 100 வாய்ப்பு கொடுத்தும் அவர்கள் திருந்தவில்லை, நீ ஒரு வாய்ப்பு தானே கேட்கிறாய் தருகிறேன் என்று வில்லனும், மகாபாரதத்தில் கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு பதிலாக கௌரவர் பக்கம் நின்று இருந்தால்? நீங்கள் மகாபாரதத்தை போர் இல்லாமல் படித்து பாருங்கள் என்று நாயகன் கார்த்தியும் பேசும் வசனம் உள்ளது 
 
விவேக்-மெர்வின் அட்டகாசமான பின்னணி இசையில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் ராஷ்மிகா மந்தனா ரொமான்ஸ் காட்சிகளும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளன. இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் இந்தப் படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது