ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 3 பிப்ரவரி 2021 (21:26 IST)

சிம்பு, கௌதம் வாசுதேவ் படத்திற்கு இசையமைப்பாளர் இவர்தான் !

நடிகர் சிம்புவின் அடுத்த படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மற்றும் பிரபல தயாரிப்பு நிறுவனமாக வேல்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார். இந்நிலையில், தற்போது டுவிட்டர் பக்கத்தில் கௌதம் வாசுதேவ் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகத்  தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் ஈஸ்வரன். இப்படத்தை இயக்குநர் சுசீந்தரன் இயக்கினார். இப்படம் வெறும் 35 நாட்களில் ஹூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டதை அனைவரும் வியந்து பாராட்டினர். இப்படம் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டுள்ளது.

இந்நிலையில் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தின் டீசரை இன்று ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். அடுத்து தேசிய விருது இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், சிம்புவுக்கு தற்போது இரண்டாவது இன்னிங்க்ஸ் என்பதால் அவர் ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து வைக்கிறார். சமீபத்தில் வேல்ஸ் ஃபிலிம் இன்ஸ்டர்நேஷனல் தலைவர் ஐசரி கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தான் தயாரிக்கவுள்ள அடுத்த படத்திற்கு சிம்புவை ஹீரோவாக ஒப்பந்தம் செய்துள்ளதாகப் பதிவிட்டார்.

இப்படம் சிம்புவின் 47 வது படம் என்பதால் இப்படத்தை இயக்குநர் கௌதம் மேனம் இயக்கவுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். அநேகமாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2 ஆம் பாகமாக இருக்கலாம் என தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் விதத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகத் தெரிவித்து, இந்தச் செய்தியை சிலம்பரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியாகத் தெரிவித்துள்ளார் கௌதம்.

சிம்புவின் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.