செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (17:06 IST)

தமிழில் மட்டுமே மாநாடு… மற்ற மொழிகளில் எல்லாம் இந்த பெயர்தான்!

சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் டீசர் ஐந்து மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்த படம் தற்போது முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. முன்னதாக இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் டீசர் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் டீசரை இயக்குனர் அனுராக் காஷ்யப் வெளியிட்டார். சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படமான டெனட்டை போல காட்சிகள் ரிவர்ஸில் செல்லும் வகையில் உள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இஸ்லாமிய இளைஞனாக இதில் சிம்பு நடித்துள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தலைப்புப் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 5 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் தலைப்பு தமிழில் மட்டுமே மாநாடு என்று வைக்கப்பட்டுள்ளதாம், மற்ற மொழிகளில் எல்லாம் ரீவைண்ட் என்ற தலைப்பை வைத்துள்ளனராம்.