வெள்ளி, 31 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated: சனி, 11 மார்ச் 2023 (18:13 IST)

'பத்து தல' பட 2 வது சிங்கில் ஜிலிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்!

pathu thala
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல'படத்தின் 2 வது சிங்கிலின் பற்றிய ஜிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

கன்னட சினிமாவில் வெளியான மப்டி படம் தமிழில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தை  ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தை கிருஷ்ணா இயக்கி வருகிறார்.   நடிகர் சிம்பு மற்றும் கெளதம் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து, வரும்  மார்ச் மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடியோ வெளியீடு வரும் மார்ச் 18 ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்த படத்துக்கான பின்னணி இசைப் பணிகளை இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் படத்தில் இருந்து வெளியான ஒரு பாடல்  வெளியாகி இணையதளத்தில் வைரலானது.
இந்த நிலையில்,  இப்படத்தின் 2வது சிங்கில் நினைவிருக்கா  என்ற பாடல் வரும் மார்ச் 13 ஆம் தேதி 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் 2வது சிங்கில் பற்றிய ஜிலிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில்,, இயக்குனர் கிருஷ்ணா படத்தின் காட்சி சூழலை வெளிப்படுத்தும்போது, பாடலாசிரியர் கபிலன் வரிகளைக் கூற, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்பாடலை .ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீர் பாடியுள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது.