நடிகர் சிம்புவுக்கு திருமணம் நடக்க வேண்டி..முட்டிபோட்டு ரசிகர்கள் வேண்டுதல் !
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். இவர் தற்போது வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சிம்புக்கு பெண் பார்த்து வருவதாக அவரது தந்தை டி.ராஜேந்தர் கூறினார்.
இந்நிலையில் பலரும் சிம்புக்கு எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
எனவே, சிம்புவின் திருமணம் விரைவில் நடக்க வேண்டி, வேலூர் மாவட்டம் சிம்பு ரசிகர் மன்றத் தலைவர் மதன் தலைமையில் கோயிலில் முட்டிபோட்டு சாமியிடம் வேண்டுதல் செய்தனர்.