வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (18:05 IST)

பிக்பாஸில் இருந்து கமல் வெளியேற வேறு ஒரு காரணமும் இருக்கா? வெளிவந்த உண்மை!

நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இப்போது விக்ரம் படத்தில் கவனம் செலுத்துவதற்காக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்றும் இந்த முடிவை எடுக்க எனக்கு ஒத்துழைப்பு அடுத்த டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் டிவி நிர்வாகத்திற்கு எனது நன்றி என்றும் கமலஹாசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். விக்ரம் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியவர்களின் தேதிகளை வீணடிக்கக் கூடாது என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கமலின் விலகலுக்குப் பின்னர் வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. அது என்னவென்றால் கமலின் விக்ரம் படத்தையும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம்தான் மிகப்பெரிய தொகைக் கொடுத்து வாங்கியுள்ளதாம். அதனால் அந்த படத்தை முடிப்பதற்காக அந்நிறுவனமே கமலை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்ள சொன்னதாக சொல்லப்படுகிறது.