அஜித் போலவே கார் ரேஸ் பயிற்சி பெறும் நாக சைதன்யாவின் புது மனைவி.. வைரல் புகைப்படஙக்ள்..!
நடிகர் அஜித் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பதோடு மட்டுமல்லாமல், கார் ரேஸ் பயிற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றார். மேலும், உலகளாவிய சில முக்கியமான கார் ரேஸ்களில் அவர் பங்கேற்றதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
இந்நிலையில், அஜித்தை போன்று ஒரு பிரபல நடிகையும் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள சோபிதா துலிபாலா, சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்தார். இந்த நிலையில் சோபிதா துலிபாலா தனது கணவர் நாக சைதன்யாவுடன் சேர்ந்து கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இதனால், அவர் உண்மையில் கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்க உள்ளாரா, அல்லது எந்தொரு திரைப்படத்திற்காக இதை பயிற்சி செய்து வருகிறாரா என்பது தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும், இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளதுடன், சோபிதாவிற்கு ஆதரவாக வாழ்த்துக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன.
Edited by Siva