5 மொழிகள், ரூ.125 கோடி பட்ஜெட்: சிம்புவின் 'மகா மாநாடு'

Last Modified புதன், 14 ஆகஸ்ட் 2019 (14:40 IST)
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த 'மாநாடு' திரைப்படத்தில் இருந்து சிம்பு நிக்கப்படுவதாகவும், அவருக்கு பதில் இந்த படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிப்பதற்காக சமீபத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அவருடைய இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் சிம்பு உடனடியாக இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று சிம்பு ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்
இந்த நிலையில் சிம்பு இன்று ஒரு புதிய திரைப்பட அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார். டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் சிம்பு நடிக்க இருக்கும் இந்த படத்திற்கு 'மகா மாநாடு' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் இந்த திரைப்படம் உருவாக இருப்பதாகவும், இந்த படத்தை சிம்புவே இயக்கவிஒருப்பதாகவும் கூறப்படுகிறது. ரூ.125 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகவுள்ளதாம்.
சிம்புவின் இந்த அதிரடி அறிவிப்பால் சிம்பு ரசிகர் உற்சாகத்தில் உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் சிம்புவின் பல திரைப்படங்கள் அறிவிப்போடு நின்று உள்ளது என்பதும், அதன் பின் அந்த படம் என்ன ஆனது என்பதே தெரியாமல் இருந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த பட்டியலில் இந்த 'மகா மாநாடு' படமும் சேர்ந்து விடுமா? அல்லது அதிரடியாக இந்த படம் தயாரித்து வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்


இதில் மேலும் படிக்கவும் :