திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 26 அக்டோபர் 2020 (12:45 IST)

சிம்பு-46 படத்தின் முக்கிய அறிவிப்பு....டுவிட்டரில் #SilambarasanTR46 ஹேஸ்டேக் டிரெண்டிங்

நடிகர் சிம்பு நடிப்பில் சுசீந்தரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மோசன் டீஸர் இன்று நள்ளிரவு ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டநிலையில் தற்போது  #SilambarasanTR46 என்ற பெயரில் டுவிட்டரில் ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது.

கடந்த சில காலமாக திரைப்படங்கள் எதுவும் வெளியிடாமல், ஒப்பந்த படங்களையும் முடித்து கொடுக்காமல் இருந்த சிம்பு தற்போது தொடர்ச்சியாக படபிடிப்பு பணிகளில் இறங்கியுள்ளார். வெங்கட் பிரபுவின் “மாநாடு” படம் சில பிரச்சினைகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இயக்குனர் சுசீந்திரனுடன் புதிய படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

”வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் கிராமத்து கபாடி போட்டிகளை பொதுவெளிக்கு காட்டிய இயக்குனர் சுசீந்திரன் இந்த படத்தில் தெரு கிரிக்கெட் போட்டிகளை சாராம்சமாக கொண்ட கதையை எடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றாற்போல கிரிக்கெட் மட்டை. அழுக்கு வேட்டியுடன் மைதானத்திற்குள் நுழைவது போன்ற போஸ்டர் வெளியானது. இதுகுறித்து சிம்புவின் தீவிர ரசிகர் மஹத் தனது அதிகாரக்பூர்வ பக்கத்தில் இதுகுறித்த தகவல் வெளியிட்டார்.

பெயரிடப்படாத இந்த படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் இன்று நள்ளிரவு சரியாக 12.12 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிம்புவின் ரசிகர்கள் #SilambarasanTR46 என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டுவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.