சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு ! ரசிகர்கள் மகிழ்ச்சி

sooraraipotru
Sinoj| Last Updated: செவ்வாய், 27 அக்டோபர் 2020 (14:56 IST)

சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தை வெளியிட தடையில்லாச் சான்று பெறுவதில் தாமதம்
ஆன நிலையில் இன்று சூரரைப் போற்று படத்திற்கு தடையில்லாச் சான்று பெற்றுள்ளனர்.


இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் டிரைலவர், அக்டோபர் 26 (இன்று )காலை 10 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் சூரரைப் போற்று பட டிரைலரை வெளியிட்டுள்ளார்.


இதனால் சூர்யாவின் ரசிகர்கள் #SooraraiPottruTrailer என்ற ஹேஸ்டேக் உருவாக்கி ட்விட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர். இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இப்படம் வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :