1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (13:08 IST)

முதல்பட நாயகனுடன் வீடியோ காலில் பேசிய ஜெனிலியா: வைரலாகும் வீடியோ!

முதல்பட நாயகனுடன் வீடியோ காலில் பேசிய ஜெனிலியா
சித்தார்த் மற்றும் ஜெனிலியா ஆகிய இருவருமே ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்கள் என்பது தெரிந்ததே. கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே 
 
இந்த படத்திற்கு பின்னர் தமிழில் சித்தார்த் ஜெனிலியா இணைந்து நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் ஒரு சில படங்களில் இணைந்து நடித்தனர். அவ்வாறு இருவரும் இணைந்து நடத்த ஒரு தெலுங்கு திரைப்படம் தான் பொம்மரிலு. இந்தத் திரைப்படம் தமிழில் ’சந்தோஷ் சுப்பிரமணியம்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது என்பதும் சித்தார்த் நடித்த வேடத்தில் ஜெயம் ரவியும் ஜெனிலியாவின் கேரக்டரில் ஜெனிலியாவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தெலுங்கில் பொம்மரிலு. திரைப்படம் வெளிவந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அதனை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதனை அடுத்து ஜெனிலியா தனது முதல் பட நாயகன் சித்தார்த்துடன் வீடியோ காலில் இந்த படம் குறித்து பேசியுள்ளார். சித்தார்த்துடன் பேசிய இந்த வீடியோவை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்