அந்த டைரக்டர இனிமே நான் பாக்கக் கூடாது… கடுப்பான ரஜினி!
ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்துக்குப் பிறகு சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது.
ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன் பின்னர் அவர் நடிக்கும் படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஜினியின் அடுத்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது சம்மந்தமாக ரஜினி, அவரிடம் கதை கேட்டதாகவும் ஆனால் அந்த கதையில் திருப்தி இல்லாததால் அந்த கதையில் நடிக்க மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
ரஜினி அந்த படத்தில் நடிக்க மறுத்ததற்கு மற்றொரு முக்கியக் காரணமும் உள்ளதாம். சிபி சக்ரவர்த்தியின் செயல்பாடு அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பதால்தான் அவர் நிராகரித்தாராம். மேலும் இனிமேல் சிபியை தன்னை பார்க்க அனுமதிக்க வேண்டாம் என சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.