1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 21 மார்ச் 2018 (16:30 IST)

விஜய், ஏ.ஆர்.முருகதாஸை மறைமுகமாக தாக்கிய சித்தார்த்!

விஜய் நடித்து வரும் ’தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி கொடுத்தற்கு நடிகர் சித்தார்த் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


டிஜிட்டல் நிறுவனங்களின் அதிக கட்டணத்தை எதிர்த்து மார்ச் 1ஆம் தேதியில் இருந்து புதிய படங்கள் வெளியீடு இல்லை என்ற போராட்டம், மார்ச் 16ஆம் தேதியில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிநாடு என எங்கும் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்ற போராட்டம், போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் உள்பட அனைத்து பணிகளும் முடங்கியிருப்பதால் ஒட்டுமொத்த திரையுலகமே ஸ்தம்பித்துள்ளது.
 
அந்நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ’தளபதி 62’படத்தின் படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், சித்தார்த் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், 
 
ஒரு படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதி கொடுத்தால், எல்லா தயாரிப்பாளர்களுக்கும் சிறப்பு அனுமதி கொடுங்கள். நாங்கள் அனைவரும் சமமே. சமநிலை மற்றும் ஒற்றுமை இல்லாவிட்டால் கடவுள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.