விஜய் படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா? கொதித்தெழும் கோடம்பாக்கம்
மார்ச் 1ஆம் தேதியில் இருந்து புதிய படங்கள் வெளியீடு இல்லை என்ற போராட்டம், மார்ச் 16ஆம் தேதியில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிநாடு என எங்கும் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்ற போராட்டம், போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் உள்பட அனைத்து பணிகளும் முடங்கியிருப்பதால் ஒட்டுமொத்த திரையுலகமே ஸ்தம்பித்துள்ளது
இந்த நிலையில் விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பை நடத்த சிறப்பு அனுமதி கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தை அடுத்து மேலும் 3 படங்களுக்கும் சிறப்பு அனுமதி கேட்கப்பட்டுள்ளதாம். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தினக்கூலி வாங்கி பணிபுரியும் ஆயிரக்கணக்கான சினிமாதொழிலாளிகளே வேலை நிறுத்தத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் விஜய், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படங்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதியா? என்று கோடம்பாக்கமே கொதித்தெழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை விஜய் படத்திற்கு சிறப்பு அனுமதி கிடைத்தால் தயாரிப்பாளர் சங்கமே பிளவுபடும் என்றும் வேலைநிறுத்தமும் பிசுபிசுத்துவிடும் என்றும் கூறப்படுகிறது.