ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 27 மார்ச் 2024 (15:25 IST)

நடிகர் சித்தார்த்துக்கு 2வது திருமணம்.. விவாகரத்தான நடிகையை மணந்தாரா?

நடிகர் சித்தார்த் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்த நிலையில் தற்போது பிரபல நடிகையை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
நடிகர் சித்தார்த் இன்று தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோவிலில் நடிகை அதிதிராவ் ஹைத்ரி  என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.  நடிகர் சித்தார்த் கடந்த 20003ஆம் ஆண்டு மேக்னா என்பவரை திருமணம் செய்து அதன் பின் சில ஆண்டுகளில் விவாகத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அதிதிராவ் ஹைத்ரி  என்பவருடன் கடந்த சில ஆண்டுகளாக சித்தார்த் டேட்டிங்கில் இருந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
இந்த நிலையில் இன்று காலை இரு தரப்பின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இரு தரப்பினரும் திருமணத்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை 
 
நடிகை அதிதிராவ் ஹைத்ரி  ஏற்கனவே சிறுவயதிலேயே திருமணம் செய்து அதன் பின்னர் விவாகரத்து செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran