ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 26 அக்டோபர் 2023 (20:07 IST)

ஸ்ருதிஹாசனின் புதிய இசை ஆல்பம் #MonsterMachine பாடல் ரிலீஸ்...

sruthi hasan
ஸ்ருதிஹாசனின் புதிய இசை ஆல்பம் பாடல் ரிலீஸாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இவர் அமெரிக்காவில் இசைத்துறையில் படித்து இந்தியா திரும்பிய பின் உன்னைப்போல் ஒருவன் என்ற படத்தில் ஒரு பாடலை இசையமைத்து பாடியிருந்தார்.

அதன்பின்னர், சூர்யாவின் 7 ஆம் அறிவு, விஜய்யுடன் புலி, அஜித்துடன் விவேகம்  ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

தற்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு இசை ஆல்பத்தை உருவாக்க உள்ளதாக சமீபத்தில் கூறினார்.

இந்த நிலையில், ஸ்ருதிஹாசனின் யூடியூப் பக்கத்தில் மான்ஸ்டர் மெசின் என்ற ஆல்பம் பாடலை இசையமைத்து ,பாடியதுடன்  நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

இந்த ஆல்பம் பாடலை கரன் கஞ்சன் மற்றும் கரன் பரீக் தயாரித்துள்ளனர். இப்பாடல் நேற்று வெளியான நிலையில் கமல் இதை தன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.