1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 25 அக்டோபர் 2023 (14:39 IST)

'விஜய்- யுவன் இணைந்துள்ள விஜய்68' - ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

vijay68
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும்  ’தளபதி 68’. இப்பட ஷூட்டிங் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய நிலையில்,  இந்த  பூஜை வீடியோவை படக்குழுவினர் யூடியூபில் வெளியிட்டனர்.

இந்த    நிகழ்ச்சியில்  விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல், யோகி பாபு, விடிவி கணேஷ்,  வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டார். பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சித்தார்த் மணி ஒளிப்பதிவு, வெங்கட்ராஜ் எடிட்டிங் மற்றும் திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஜய்68 படத்தில் யுவன் இசையமைப்பில் மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஆடியோ உரிமையை  T Series கைப்பற்றியுள்ளது. இதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.